செய்திகள் & நிகழ்வுகள்

பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
Apr 11, 2026

பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

எமது பாடசாலையின் பழைய மாணவர்களின் அனுசரணையுடன் பாடசாலை சமூகத்தினால் பெருமையுடன் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை(11.04.2026) நடைபெற்றது.

இந்நிகழ்வில் க.பொ.த உயர்தர பரீட்சை 2025 இல் தேசிய மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற மாணவர்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் பிரதான பாடத்துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன் தேசிய ரீதியிலான ஆங்கில போட்டியில் Creative writing 1ம், 2ம் இடங்களை பெற்று சாதனை படைத்த சுவேதனா மற்றும் அமுதவன் ஆகிய உயர்தர மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.

நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட  பல  அதிதிகள் எமது அழைப்பினை ஏற்று கலந்த கொண்டு எமது மாணவர்களை வாழ்த்தினர்.

மேலும், பழைய மாணவர்களினால் "கல்விச் சாதனை விருதுகள் 2026" என்ற கருப்பொருளின் கீழ், தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ரூபா ஒரு மில்லியன் பணப்பரிசும், மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற இரு மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாவும், Merit சித்தி பெற்ற நான்கு மாணவர்களுக்கு தலா 50,000 ரூபாவும், வெற்றி சின்னங்களும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், இச்சாதனைக்கு வித்திட்ட 10 ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ஆகியோர் எமது சாதனை மாணவர்களை வாழ்த்த நேற்று (01.04.2026) நேரில் வருகை தந்தனர்.
Apr 02, 2026

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ஆகியோர் எமது சாதனை மாணவர்களை வாழ்த்த நேற்று (01.04.2026) நேரில் வருகை தந்தனர்.

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த எமது வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நேற்று (01.04.2026) எமது பாடசாலைக்கு நேரடியாக வருகை தந்த கௌரவ ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் எமது சாதனை மாணவர்கள் திருக்குமரன், கிருஷோந்த், மதுமினி ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் 
தமது கடின உழைப்பாலும் சுயமுயற்சியாலும் மாபெரும் வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டிப் பேசிய ஆளுநர், 'கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவரொருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றுள்ளமை, மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது' எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், 'இந்தச் சாதனை மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதோடு, எதிர்காலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார்.

மேற்படி விடயம் தொடர்பாக எமது பாடசாலையின் வருடாந்த பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டம் மற்றும் புதியநிர்வாக தெரிவு என்பவை எதிர்வரும் 31/03/2026  (செவ்வாய்க்கிழமை) நடைபெறும்.இடம் :- பாடசாலை ஒன்று கூடல் மண்டபம்நேரம்:- 12.00pmஇதில் அனைத்து பெற்றோர்களும் தவறாது கலந்து கொண்டு பாடசாலையின் அபிவிருத்தி த...
Mar 25, 2026

வருடாந்த பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும்

மேற்படி விடயம் தொடர்பாக எமது பாடசாலையின் வருடாந்த பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டம் மற்றும் புதியநிர்வாக தெரிவு என்பவை எதிர்வரும் 31/03/2026  (செவ்வாய்க்கிழமை) நடைபெறும்.

இடம் :- பாடசாலை ஒன்று கூடல் மண்டபம்

நேரம்:- 12.00pm

இதில் அனைத்து பெற்றோர்களும் தவறாது கலந்து கொண்டு பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும், ஆண்டுக்கான செயற்பாடுகள் தொடர்பாகவும் தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.

தகவல்:- நிர்வாகம்