நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், எமது பாடசாலைக்கு சொந்தமான இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணியை விடுவிக்கும் நோக்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் இன்று (29.10.2026) பாடசாலைக்குக் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இக்களவிஜயத்தின் போது, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளைப் எமது அதிபர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நேரில் காண்பித்து நிலைமைகளை விளக்கிக் கூறினார்.
மேலும், இந்நிகழ்வின் போது Clean Sri Lanka திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் உடன் இருந்தனர். பாடசாலை சமூகத்தின் நலன் கருதி இக்காணியை விரைவாக விடுவிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.