• Empowering Students with Excellence
    1927 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எங்கள் பாடசாலை, தலைமைத்திறனையும் மேன்மையையும் வளர்க்கும் உயர்ந்த மரபை தாங்கி, சமூகத்திற்கு வழிகாட்டும் சிறந்த மனிதர்களை உருவாக்கி வருகின்றது.
  • Empowering Students with Excellence
    1927 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எங்கள் பாடசாலை, தலைமைத்திறனையும் மேன்மையையும் வளர்க்கும் உயர்ந்த மரபை தாங்கி, சமூகத்திற்கு வழிகாட்டும் சிறந்த மனிதர்களை உருவாக்கி வருகின்றது.
  • நோக்கக்கூற்று

    புத்தியும் உத்தமமும் ஞானமும் ஆக்கமும் ஒளிரும் மாணவரை புது உலகுக்காய் ஆக்குவோம்

  • பணிக்கூற்று

    மாணவ வளத்தையும் ஆசிரியர் வளத்தையும் சூழலின் வளத்தையும் இணக்கியும் அறிவுக்கான உச்சமான பயனுறுதி மிக்க பணியை நாளாந்தம் முன்னிறுத்தி உலக சுபீட்சத்தில் பங்கெடுப்போம்

  • மகுடவாசகம்

    கற்க கசடற

1927 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை கிளிநொச்சி மாவட்டத்திலும் தேசிய மட்டத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்யும் தொலைநோக்கு பார்வையுள்ள சிறந்த தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் கல்விமான்களையும் உருவாக்கும் பெருமைமிகு பாரம்பரியத்தை உடையதாகும். 1AB தர பாடசாலையான நாங்கள் தரம் 1 முதல் தரம் 13 வரை தரமான கல்வியை வழங்குகிறோம், இது பல்வேறு மாணவர்களின் ஆர்வங்கள் மற்றும் குறிக்கோள்களை பூர்த்தி செய்கின்றது. க.பொ.த உயர்தரத்தில், உயிரியல், கணிதம், கலை மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் சிறப்புப் பாடங்களை வழங்குவதன் மூலம், மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்குவதற்கான அறிவு மற்றும் திறன்களை வழங்குகின்றோம்.

2300+
மாணவர்கள்
100+
ஆசிரியர்கள்
1927
ஆரம்பம்
பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
Apr 11, 2026

பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

எமது பாடசாலையின் பழைய மாணவர்களின் அனுசரணையுடன் பாடசாலை சமூகத்தினால் பெருமையுடன் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் 2025ம் ஆண்டில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் மற்றும் ஏனைய சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை(11.04.2026) நடைபெற்றது.

இந்நிகழ்வில் க.பொ.த உயர்தர பரீட்சை 2025 இல் தேசிய மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற மாணவர்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் பிரதான பாடத்துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன் தேசிய ரீதியிலான ஆங்கில போட்டியில் Creative writing 1ம், 2ம் இடங்களை பெற்று சாதனை படைத்த சுவேதனா மற்றும் அமுதவன் ஆகிய உயர்தர மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.

நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட  பல  அதிதிகள் எமது அழைப்பினை ஏற்று கலந்த கொண்டு எமது மாணவர்களை வாழ்த்தினர்.

மேலும், பழைய மாணவர்களினால் "கல்விச் சாதனை விருதுகள் 2026" என்ற கருப்பொருளின் கீழ், தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ரூபா ஒரு மில்லியன் பணப்பரிசும், மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற இரு மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாவும், Merit சித்தி பெற்ற நான்கு மாணவர்களுக்கு தலா 50,000 ரூபாவும், வெற்றி சின்னங்களும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், இச்சாதனைக்கு வித்திட்ட 10 ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ஆகியோர் எமது சாதனை மாணவர்களை வாழ்த்த நேற்று (01.04.2026) நேரில் வருகை தந்தனர்.
Apr 02, 2026

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ஆகியோர் எமது சாதனை மாணவர்களை வாழ்த்த நேற்று (01.04.2026) நேரில் வருகை தந்தனர்.

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த எமது வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நேற்று (01.04.2026) எமது பாடசாலைக்கு நேரடியாக வருகை தந்த கௌரவ ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் எமது சாதனை மாணவர்கள் திருக்குமரன், கிருஷோந்த், மதுமினி ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் 
தமது கடின உழைப்பாலும் சுயமுயற்சியாலும் மாபெரும் வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டிப் பேசிய ஆளுநர், 'கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவரொருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றுள்ளமை, மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது' எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், 'இந்தச் சாதனை மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதோடு, எதிர்காலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார்.