• Empowering Students with Excellence
    Established in 1927, our school has a proud tradition of fostering leadership and excellence, shaping the pillars of our community.
  • Empowering Students with Excellence
    Established in 1927, our school has a proud tradition of fostering leadership and excellence, shaping the pillars of our community.
  • Our Vision

    We will create students glowing with intelligence, righteousness, wisdom, and creativity for the new world.

  • Our Mission

    We will combine student, teacher resources with social resources to present highly effective services for knowledge daily and partake in the welfare of the world.

  • Our Motto

    “Katka Kasadara” - learn properly and thoroughly

Established in 1927, our school has a storied tradition of cultivating leaders and visionaries who make significant contributions to our district and beyond. As a 1AB grade institution, we offer a comprehensive educational journey from Grade 1 to Grade 13, accommodating a diverse array of student interests and aspirations. At the GCE Advanced Level, we provide specialized streams in Biology, Mathematics, Arts, and Commerce, equipping students with the knowledge and skills to excel in their chosen fields.

2300+
Students
100+
Teachers
1927
Founded
தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம்
Jul 31, 2026

தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம்

எமது பாடசாலையின் தரம் 10 இல் கல்வி கற்கும் லிங்கராஜா தஷ்வின் எனும் மாணவன் தரம் 9,10,11  ஆகிய தரங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சர்வதேச கணிதப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த மாணவர்களை தெரிவு செய்யும் போட்டி பரிட்சையில் ஐந்தாம் இடத்தினை பெற்று மொங்கோலியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச கணித போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார். 

32 நாடுகளில் இருந்து ஏறத்தாழ 600 மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் தஷ்வின் (Merit)விசேட சித்தியினைப் பெற்றுக்கொண்டார். 

எமது பாடசாலைக்கு பெருமை தேடித் தந்த இம் மாணவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது பாடசாலைக்கு சொந்தமான இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணியை விடுவிக்க கோரி நடவடிக்கை
Nov 02, 2026

எமது பாடசாலைக்கு சொந்தமான இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணியை விடுவிக்க கோரி நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், எமது பாடசாலைக்கு சொந்தமான இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணியை விடுவிக்கும் நோக்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன்  இன்று (29.10.2026) பாடசாலைக்குக் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இக்களவிஜயத்தின் போது, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளைப் எமது அதிபர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நேரில் காண்பித்து நிலைமைகளை விளக்கிக் கூறினார்.

மேலும், இந்நிகழ்வின் போது Clean Sri Lanka திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர்  மருங்கன் மோகன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் உடன் இருந்தனர். பாடசாலை சமூகத்தின் நலன் கருதி இக்காணியை விரைவாக விடுவிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 ற்கான முதலாவது சுற்று தொடரில் #5வது_போட்டி
Aug 07, 2026

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 ற்கான முதலாவது சுற்று தொடரில் #5வது_போட்டி

இலங்கை பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற வயது 15 பிரிவு 3 ற்கான முதலாவது சுற்று தொடரில் #5வது_போட்டி  06,08,2026 அன்று  கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி  இன்னிங்ஸ் மற்றும் #92_ஓட்டங்களால்_வெற்றி_பெற்றது. முதலாவது சுற்று தொடரில் நடைபெற்ற #5_போட்டிகளிலும்_வெற்றி_பெற்று_அடுத்த_சுற்றுக்கு_தெரிவாகியுள்ளது.

5 போட்டிகளிலும்  அணி சார்பாக  துடுப்பாட்டத்தில்  
#ஷாதீன் -  138 ஓட்டங்கள் 
#கிரிஷரன்- 164 ஓட்டங்கள் 
#தினுஷாந்த்  - 167 ஓட்டங்கள்

பந்துவீச்சில்

#பரதன் - 30 இலக்குகள் 
#பவஜிதன்  - 27 இலக்குகள்